மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறைகளை சி.பி.ஐ விசாரித்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கொல்கத்தா பேட்சை சார்ந்த அதிகாரிகளை கொண்ட சிறப்புப் புலனாய்வு குழு (ஏஸ்.ஐ.டி) விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. எஸ்.ஐ.டி விசாரணை என்பது நீதிமன்றமே தலைமை ஏற்று வழிநடத்தும் புலனாய்வு விசாரணை. இதில் மத்திய மாநில அரசுகள் தலையிட முடியாது. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்க முடியாது. உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று திருணாமுல் காங்கிரஸ் கூறி இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற வன்முறைகளினால் மமதா பானர்ஜியின் ஆட்சிக்கு கண்டம் ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் தேர்தலில் தோற்றதால், தற்காலிக முதல்வராக மட்டுமே பதவியேற்றுள்ளார் மமதா. எம்.எல்.ஏ பதவியில் இல்லாத மமதா, வரும் அக்டோபர் மாதத்திற்கு பிறகு முதல்வராக தொடர முடியுமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. காரணம், கொரோனா பிரச்சனையால் தற்போதைக்கு தேர்தலை நடத்தமுடியாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. இது குறித்து மமதா போட்ட வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நவம்பருக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். எனவே, தற்போது மமதா பானர்ஜியின் முதல்வர் பதவியே அந்தரத்தில் தொங்குகிறது. இந்நிலையில் அவர் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.