திருப்பதியில் நடைபெற்ற பா.ஜ.கவின் மக்கள் ஆசீர்வாத யாத்திரையில் கலந்துகொண்ட மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டார். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர், ‘செம்மரக்கடத்தல் சர்வதேச கடத்தல் விவகாரமாக மாறியுள்ளது. எனவே இதனை தடுத்து நிறுத்த, மாநில அரசு மத்திய அரசின் ஒத்துழைப்பை பெற வேண்டும். திருப்பதி அருகே குன்றின் மீது அமைந்துள்ள, சேதப்படுத்தப்பட்ட ஏழுமலையானின் தாயார் வகுளா தேவியின் கோவிலை புனர்நிர்மாணம் செய்ய வேண்டுமென்று பல ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை வைத்தோம். தற்போது தேவஸ்தான நிர்வாகம் அக்கோவிலை புனர்நிர்மாணம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. தேவஸ்தானம் செய்திருக்கும் பணிகளில் இது மிக சிறந்ததாக நான் கருதுகிறேன்’ என்று கூறினார்.