அடுத்த மாதம் செப்டம்பர் 10ம் தேதி வரும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக, தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். கடந்த ஆண்டு, ஹிந்து அமைப்புகள், கொரோனா வழிகாட்டுதல்படி நடப்பதாக கூறி தமிழக அரசிடம் அனுமதி கேட்டனர். ஆனால், முந்தைய அ.தி.மு.க அரசு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதித்தது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டது. பல விநாயகர் சிலை செய்யும் இடங்கள் சீல் வைக்கப்பட்டன, அங்கு காவல்துறையினர் அராஜகத்திலும் ஈடுபட்டனர். இதனால், விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தது. தயாரிப்பாளர்களுக்கு இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் விற்பனை ஆகாமல்போனால், சாவதைத்தவிர வேறு வழி இல்லை என கும்பகோணத்தில் விநாயகர் சிலை தயாரித்து வரும் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார். தமிழக அரசு, இதனை குறித்து சிந்திக்குமா?