பாரத தூதரக அதிகாரிகள், ஊழியர்கள், தூதர்கள் என 120 பேருடன் விமானப்படையின் சி 17 என்ற சிறப்பு விமானம் குஜராத்தின் ஜாம்நகருக்கு வந்தடைந்தது. இது குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், ‘ஆப்கன் நிலைமையை கண்காணித்து வருகிறோம். அங்குள்ள பாரத தேசத்தவர், குறிப்பாக ஹிந்து, சீக்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமெரிக்க பிரதிநிதி ஆன்டனி பிளிங்கனுடன் தொலைபேசியில் பேசியுள்ளேன்’ என்றார். பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரிக்கு அனுப்பிய ஒரு டுவிட்டர் பதிவில், ‘காபூலில் உள்ள சீக்கிய, ஹிந்து சமூகத் தலைவர்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அவர்களின் நலனில் எங்களுக்கு அக்கறை உள்ளது. அவர்கள் பற்றிய தகவல்களும் எங்களிடம் உள்ளன’ என கூறி மேலும் தகவல்களுக்காக வெளியுறவுத்துறையின் சிறப்பு ஆப்கானிஸ்தான் பிரிவின் அலைபேசி எண் (+919717785379), மின்னஞ்சல் முகவரி (MEAHelpdeskIndia@gmail.com) ஆகியவற்றையும் வழங்கியுள்ளார்.