ஆப்கானியர்களுக்கு அடைக்கலம் மறுப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளியேறுவோர் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கு அடைக்கலம் தர, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கத்தார், உஸ்பெகிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை வைத்து வருகிறது. எனினும் இந்த நாடுகள் அவர்களை அகதிகளாக ஏற்க மறுத்து வருகின்றன. பெயருக்கு ஒருசிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அடைக்கலம் தருகின்றன. ஏற்கனவே ரோஹிங்கியாக்களால் பல்வேறு இன்னல்களை நாங்கள் சந்திக்கிறோம் எனவே எங்களால் முடியாது என வங்கதேசம் கை விரித்துவிட்டது. இதனை வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமென் யு.என்.பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்தார்.

முஸ்லிம்களின் ஷரியா சட்டப்படி ஆட்சி செய்வோம் என தலிபான்கள் கூறுகின்றனர். அந்த முஸ்லிம் ரீதியிலான ஆட்சியை அங்குள்ள முஸ்லிம்களே ஏற்காமல் பயந்து நாட்டைவிட்டு ஓடுகின்றனர். வெளியேறும் அந்த முஸ்லிம்களுக்கு சக முஸ்லிம் நாடுகளே ஆதரவளிக்க மறுக்கின்றன. இது ஏன்? என இணையதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.