ஸ்டாலினுக்கு சுப்ரமணியசாமி எச்சரிக்கை

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர்; திருச்சி, சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோவில்களில் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதை குறித்து பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, ‘இந்திய அரசியல் சட்டத்தின்படி தான், ஹிந்து அறநிலைய சட்டம் 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூஜாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்டோரை நியமிக்க, கோவிலை நிர்வகிக்க அறங்காவலருக்குத்தான் அதிகாரம் உள்ளது. சட்டம் அப்படி இருக்கையில், முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதேபோல, சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீக்ஷிதர்களின் நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். நடராஜர் கோவிலை தீக்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இப்போதும் அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டுள்ளது. இது தவறானது. முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரையும் செல்வேன். எனவே, இந்த உத்தரவை உடனடியாக ஸ்டாலின் வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், அதன் விளைவுகளை சந்திக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.