காங்கிரசும் கொடி சர்ச்சையும்

பாரத தேசத்திற்கான சுதந்திரத்தை ஏதோ தாங்கள் மட்டுமே ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுத் தந்ததாகக் கூறி சுபாஷ் சந்திரபோஸ், வீர சாவர்க்கர் உள்ளிட்டோரின் தியாகங்களை திட்டமிட்டே மறைப்பது காங்கிரசின் வழக்கம். ஆனால், அப்படி சொல்வதேற்ப அவர்கள் நடக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், அரசியல் கட்சி அலுவலகங்கள், வீடுகள் என பல்வேறு இடங்களில் தேசிய கொடியை ஏற்றி மக்கள் மரியாதை செலுத்தினர். அதன் ஒருபகுதியாக, கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கொடியேற்றினார். ஆனால் அவர், தேசியக் கொடியை தலைகீழா ஏற்றினார். கொடிக்கம்பத்தில் முக்கால் பகுதி செல்லும்போதுதான் கொடி தலைகீழாக இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். மீண்டும் கொடியை கம்பத்தில் இருந்து இறக்கி சரி செய்து ஏற்றினர். இதே போல மற்றொரு நிகழ்வில், தேசியக் கொடியை யார் ஏற்றுவது என்பதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில், ராகுல் காந்தி வாழ்க, சோனியா காந்தி வாழ்க என்று கோஷம் எழுப்பியவாறே தேசியக் கொடியை ஏற்றினர் காங்கிரஸ் தொண்டர்கள். பல தியாகிகள் உயிர் தியாகம் செய்து பெற்றுத்தந்த சுதந்திரத்தை ஏதோ ராகுலும் சோனியாவும் பெற்றுத் தந்ததைப்போல அவர்கள் எழுப்பிய கோஷம் மக்களிடம் அருவறுப்பை ஏற்படுத்தியது.