பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மின்சார வாகன சந்தையில் ஒரு வழியாக ஓலா ஸ்கூட்டர் நேற்று 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 121 கிலோமீட்டர் செல்லும் ஓலாவின் S1 ரக ஸ்கூட்டர் விலை 99,999 ரூபாயாகவும்181 கிலோமீட்டர் செல்லத்தக்க வண்டியின் விலை 1,29,999 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓலா அறிமுகத்திற்கு முன்பே 24 மணி நேரத்தில் 1 லட்சம் வாகனங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டது. இதுவே மக்கள் மத்தியில் எந்தளவுக்கு மின்சார வாகனங்களுக்கு ஆதரவு உள்ளது என்பதை தெரிவிக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய வாகன சந்தையான பாரதத்தில், மின்சார வாகனம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்பது திண்ணம். ஓசூரில் இதற்கு பிரம்மாண்ட ஆலையை ஓலா நிறுவனம் கட்டி வருகிறது. மத்திய அரசு மானியத்தைத் தவிர, மின்சார வாகனங்களுக்கான மாநில் அரசு மானியம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வித்தியாசப்படுகிறது. குஜராத், அதிகபட்ச மானியம் வழங்குவதால் அங்கு இவ்வாகனம் அங்கு ரூ. 79,999 என்ற விலையில் கிடைக்கும். டெல்லியில் ரூ. 85,099 ஆகவும், ராஜஸ்தானில் ரூ.89,968 எனவும், மஹாராஷ்டிராவில் ரூ.94,999 என்ர விலையிலும் கிடைக்கும். ஆனால், தமிழகத்திலேயே தயாரானாலும் இங்குள்ள மாநில அரசு மானியம் ஏதும் தராததால் மொத்த பணமும் கட்டியே மக்கள் வாங்க வேண்டியிருக்கும். தமிழக அரசு இதனை குறித்து ஆலோசித்தால் நல்லது.