கோவிலை கைவிட மறுத்த பூஜாரி

தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலை நகரான காபூலைக் கைப்பற்றி ஆட்சியையும் கைப்பற்றினர். அந்த நாட்டில் நிலவும் வன்முறை, குழப்பம் காரணமாக சொந்த நாட்டு மக்களே தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள நாட்டை விட்டு பெருமளவில் வெளியேறுகின்றனர். அதிபர் அஷ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறினார். ஆனால் காபூலில் உள்ள ரத்தன் நாத் என்ற ஹிந்து கோவிலின் பூஜாரி பண்டிட் ராஜேஷ் குமார் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள காபூலை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். அவருடைய பயணம், தங்குமிட்த்திற்கு ஏற்பாடு செய்ய பலர் முன்வந்தாலும் அதனை அவர் ஏற்கவில்லை. ‘என் முன்னோர்கள் இந்த கோவிலில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சேவை செய்துள்ளனர். நானும் அதனை தொடர்வேன். அதை கைவிட மாட்டேன். தலிபான்கள் என்னைக் கொன்றால், நான் அதை என் கடவுளுக்கான சேவையாக கருதுவேன்’ என்றார் பூஜாரி ராஜேஷ்.