மோடியின் சுதந்திர தின உரையில் சில

பாரதத்தின் 75வது சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளை நினைவு கூர்வோம். நாட்டு பிரிவினை அனைவருக்கும் வேதனை தந்தது. கோவிட் ஒழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு அனைவருக்கும் நாம் நன்றியை தெரிவிப்போம். ஒலிம்பிக் வீரர்களை வாழ்த்துவோம். சப்கா சாத் சப்கா விகாஸ் என்ற முழக்கத்தின்படி நாட்டில் அனைவரது வளர்ச்சியே நமது இலக்கு. இதற்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.

 

ஏழைகளுக்கு வழங்கப்படும் தரமான அரிசி கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள், குறைந்த விலையில் தரமான மருந்துகள், உஜ்வாலா இலவச எரிவாயு, ஜன் தன் வங்கிக் கணக்கு, மருத்துவ காப்பீடு, சுகாதார வசதிகள் உள்ளிட்ட எண்ணற்ற வசதிகளை பட்டியலிட்டார். பின்தங்கிய 110 மாவட்டங்களில் வளர்ச்சிக்கென தனிக்கவனம். கல்வி, சாலை வசதி, தகவல் தொடர்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம். கூட்டுறவு இயக்கங்களின் வளர்ச்சிக்கு தனி அமைச்சகம். நாட்டின் வளர்ச்சிக்கு புதிய கல்வி கொள்கை. 2 ஆண்டுகளில் 4.5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு. பாரதத்தில் விளையும் விளை பொருட்களை உலகம் முழுவதும் விற்பதற்கு நடவடிக்கை. விவசாயிகளின் வாழ்வில் வளம் பெருக்கும் புதிய விவசாய சட்டங்கள். கோவிட் காலத்தில்கூட தொழில்நுட்பம் பெற்ற வளர்ச்சிகள். கிராமங்களில் இணைய வசதி. காதி கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்தார்.

 

புரட்சிக்கும், புதுமைக்கும் நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். மிகப்பெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய உள்ளோம். இது உலக அளவில் தொழில் வளர்ச்சியை வளர்ப்பதுடன் பாரதத்தை பெருமை பெற செய்யும் என பாரத வளார்ச்சியில் பங்கு பெற தொழிற்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.