பயங்கரவாதிகளுக்கு உதவிய காவலர்கள்

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் கடந்த 2016ல் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் விமானப்படை வீரர்கள் ஏழு பேர் வீர மரணம் அடைந்தனர். பாதுகாப்பு படையினரின் பதிலடியில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது குறித்து, என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது. இந்த பதான்கோட் தாக்குதல் பற்றி பத்திரிகையாளர்கள் அட்ரியன் லெவி, கேதி ஸ்காட்கிளார்க் ஆகியோர் எழுதியுள்ள ‘ஸ்பை ஸ்டோரீஸ் –  இன்சைட் தி ஸீக்ரட் வேர்ல்டு ஆப் தி ரா & தி ஐ.எஸ்.ஐ’ என்ற ஆங்கில புத்தகத்தில், ராவி ஆற்றின் கிளை நதியை கடந்துதன் பயங்கரவாதிகள் பதான்கோட் விமானப்படை தளத்துக்குள் நுழைந்தனர். பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு உள்ளூர் காவல் அதிகாரிகள் உதவியுள்ளனர். இதற்காக அப்பகுதியில் கண்காணிப்பு குறைக்கப்பட்டது. உள்ளூர் காவல் அதிகாரிகள் சிலருக்கு இந்த சம்பவம் நடக்கப்போவது முன்கூட்டியே தெரிந்திருந்தது’ என தெரிவித்துள்ளனர்.