அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விடியலை நோக்கி என்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, ‘எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்’, ‘மாதம் ஒரு முறை மின் கட்டணம்’, ‘முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக அதிகரிப்பு’, ‘கல்விக் கடன் ரத்து’, ‘நகைக் கடன் ரத்து, ‘மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய், ’60 வயதிற்கு மேற்பட்டோரின் உதவித் தொகை 1500 ரூபாய்’ உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க. அரசின் முதல் நிதி நிலை அறிக்கை ‘விரக்தியை நோக்கி’ மக்களை அழைத்துச் சென்றிருக்கிறது. இது, சாதனைகளே இல்லாத சோதனைகள் நிறைந்த வேதனையான நிதிநிலை அறிக்கை. தி.மு.க பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தது இதன் மூலம் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது’ என கூறி பட்ஜெட்டில் உள்ள முரண்களை பட்டியலிட்டுள்ளார்.