ஓணம் கொண்டாட தடை

கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. நாடு முழுவதுமான மொத்த கொரோனா பாதிப்பில் கேரளாவில் மட்டும் 50 சதவீத பாதிப்பு தற்போது பதிவாகி வருகிறது. இந்நிலையில், ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளன. இதனால், மக்கள் பெருமளவில் கூட வாய்ப்புள்ளது. எனவே, வரவுள்ள ஓணம் உள்ளிட்ட விழாக்களையொட்டி, உள்ளூர் மட்டத்திலான கட்டுப்பாடுகள் 12ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இவ்விழாக்களை பொது இடங்களில் கொண்டாடவோ, பெருமளவில் கூடவோ தடை விதிக்கப்படுகிறது. புதிய பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் பரிசோதனை அதிகரிக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோவில் யாத்திரை 15ம் தேதி தொடங்குகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க, நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாநில அரசு தலைமை செயலாளரும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான வி.பி.ராய் தெரிவித்துள்ளார். முன்னதாக, முஸ்லிம்களை திருப்திப்படுத்த அவர்களின் பக்ரீத் பண்டிகைக்கு கேரள கம்யூனிச அரசு அளித்த தளர்வுகள்தான் இந்த விபரீதத்திற்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.