சட்டவிரோத கட்டடம் இடிப்பு

பாட்னாவில் சன்னி வக்ப் வாரியம் சார்பில் பல மாடி வர்த்தக வளாகம் கட்டப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பழங்காலத்தில் இருந்தே இடுகாடாகப் பயன்படுத்தப்பட்ட நிலத்தில் இந்த பல மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய அந்த சொத்தை வக்பு வாரியம் கையகப்படுத்த சட்ட விதிகளின்படி எந்த அடிப்படையும் இல்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து பாட்னா உயர் நீதிமன்றம், அந்த சட்டவிரோத கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது. மேலும், சட்டத்தை மீறி கட்டடம் கட்ட அனுமதி அளித்த அரசு அதிகாரிகளை விசாரிக்க ஆணையம் அமைக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது.