ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள், ஐ.இ.டி உட்பட அனைத்து வகை வெடிபொருட்கள், தளவாடங்களில் 96 சதவீதம் பாகிஸ்தானில் இருந்தே வருகிறது. தலிபான்கள் பாகிஸ்தானின் மரணக் குழுவாக ஆப்கனில் செயல்படுகின்றனர். ஆப்கனில் தற்போது நடந்து வரும் உள்நாட்டுப் போரில், தலிபான்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவளித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளும் ஐ.நா சபையும் தடை விதிக்க வேண்டும் என்று ஆப்கன் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆப்கனில் பாகிஸ்தானின் ஈடுபாட்டை உலகத்திற்கு எடுத்துக்காட்டி கவனத்தை ஈர்க்க #SanctionPakistan என்ற ஹாஷ்டாக்கை ஆப்கனை சேர்ந்த சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் பிரபலப்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனை வலியுறுத்தும் விதமாக அங்குள்ள மக்கள் வீதிக்கும் வந்து போராட தூவங்கியுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை அவர்கள் ‘தலிபான் கான்’ என்று பட்டப்பெயரிட்டு அழைக்கின்றனர்.