பாகிஸ்தானின் போங்க் நகரில் பழமை வாய்ந்த ஹிந்து கோயில் ஒன்று அங்குள்ள முஸ்லிம் வன்முறையாளர்களால் அடித்து உடைக்கப்பட்டது. சில இடங்களில் தீ வைக்கப்பட்டது. இதற்கு பாரதம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விஷயம் உலக அரங்கில் பரவியது. அதனையடுத்து, பாகிஸ்தான் அரசு இதன்மீது நடவடிக்கை எடுத்தது. 90 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு தரப்பில் கோயில் சீரமைக்கப்பட்டது. பணிகள் முழுமை அடைந்ததை அடுத்து ஹிந்து கோயில் மீண்டும் ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.