அதிகரிக்கும் மத வெறியர்கள்

நாடுகடத்தப்பட்ட வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், சமீபகாலமாக வங்க தேசத்தில் நடைபெற்று வரும் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை குறித்து கூறுகையில், ‘நான் லஜ்ஜா புத்தகத்தை 29 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். அதில் வங்க தேசத்தில் முஸ்லீம் மத வெறியர்களால் ஹிந்துக்கள் எவ்வாறு துன்புறுத்தப்பட்டனர், சிறுபான்மை சமூகத்தைப் பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டது என்பதை விவரித்தேன். அதே கொடூரமான செயல்கள் இன்றும் அங்கு நடக்கின்றன. பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற பாரத ராணுவம் உதவியதை வங்கதேச மக்கள் மறக்கக்கூடாது. ஆனால் நேர்மாறாக, முஸ்லீம் வெறியர்களின் எண்ணிக்கை வங்க தேசத்தில் அதிகரித்து வருகிறது. முஸ்லீம் அல்லாதவர்களுக்கு துன்புறுத்தல்கள் அதிகரிக்கின்றன. இது பாரதத்தில் உள்ளோருக்கு கவலையளிக்கிறது. ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு, ஒவ்வொரு சிறுபான்மை குடிமகனுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஒரு கௌரவமான வாழ்க்கை வாழ  அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு’ என தெரிவித்தார்.