கேரளாவில் 1921ல் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட மாப்ளா கலவரத்தில், ஹிந்துக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர், பலர் அகதிகள் ஆக்கப்பட்டனர், கட்டாய மதமாற்றம், கற்பழிப்பு என எண்ணிலடங்கா கொடுமைகள் ஹிந்துக்களுக்கு இழைக்கப்பட்டன. இக்கலவரம் நடந்து நூற்றாண்டு நிறைவடைவதையொட்டி, அதனை நினைவுகூரும் வகையில் ஏழு மாத கால நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என கேரள மாநில நூலக கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆளும் கம்யூனிச அரசு இதற்கு நிதியுதவி செய்கிறது. ஆனால், முஸ்லிம்களை திருப்திபடுத்தும் விதமாக, இந்த கலவரத்தை சுதந்திர போராட்டமாக சித்தரிக்கும் வகையிலேயே இதற்கான நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை கலவரத்தை ஒரு சுதந்திர இயக்கமாக திரித்துக் காட்டக்கூடிய வரலாற்றாசிரியர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சிக்கு பேச அழைக்கப்படுகின்றனர்.