சரணடையும் மவோயிஸ்ட்டுள்

வடகிழக்குப் பகுதிகளில் கம்யூனிச சிந்தனை கொண்ட நக்சல்கள், மாவோயிஸ்ட்டுகள் பல காலமாக வன்முறை, பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை சமுதாய வாழ்க்கைக்குத் திருப்ப ‘லோன் வரது’ (வன்முறையின் பாதையை விட்டு விலகி, தேசிய நீரோட்டத்திற்கு திரும்பும் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்) என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது தற்போது நல்ல பலனை அளித்து வருகிறது.

அவ்வகையில், ஒரிசாவில் கலஹந்தி நாயக் பிரிவின் குழுத் தளபதியாக இருந்து நக்சலைட் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராஜு கராம், பெண் நக்சலைட்டான அவரது மனைவி சுனிதா கராம் ஆகியோர் பிஜப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அப்போது அவர்கள், ‘பழங்குடியினரின் நீர், காடு, நிலத்தைப் பாதுகாக்கும் பெயரில் நக்சலைட்டுகள் எங்கள் இருவரையும் தங்கள் அணிக்கு இழுத்தனர். பின்னர், ஒடிசா, தெலுங்கானாவில் பணிபுரியும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மனம், உடல் உபாதைகளை அனுபவிக்க நக்சல் அமைப்பில் ஊக்குவிக்கப்படுகிறது. மாவோயிச சித்தாந்தம் என்பது வெற்று சித்தாந்தம், அதில் பாரபட்சமான நடைமுறைகள் உள்ளது என்பது எங்களுக்கு பிறகுதான் புரிந்தது’ என தெரிவித்தனர்.

இதேபோல, நக்சலைட் பிரிவான ஜான் மிலிட்டியா தளபதி லக்கிந்திர குஞ்சம், பீமா கோரம்  என்ற இரண்டு நக்சலைட்டுகள் தண்டேவாடாவில் சரணடைந்தனர். சரணடைந்த நக்சலைட்டுகளின் எண்ணிக்கை இதுவரை 400 ஐ எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என தண்டேவாடா  எஸ்.பி அபிஷேக் பல்லவ் தெரிவித்தார்.