அதி.மு.க ஆட்சியின்போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டார் என 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பணம் திருப்பித்தந்ததாகக்கூறி அதில் ஒரு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மீதமுள்ள 2 வழக்குகளில் விசாரணைக்காக, அமலாக்கத்துறை முன் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தற்போது தி.மு.கவில் இணைந்து தமிழக மின்சாரத்துறை அமைச்சராகிவிட்ட செந்தில் பாலாஜி, சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க உள்ளதால் ஆஜராக 1 மாதம் கால அவகாசம் கேட்டு அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.