விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பா.ஜ.க சார்பில் நடந்த தேசிய சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 1,014 பகுதிகளில் பா.ஜ.க தேசிய சுகாதார தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து களப்பணியாற்ற வேண்டும் என்பதுதான் இக்குழுவின் நோக்கம். பிற நாடுகளை விட பாரதத்தில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவு. பிரதமர் மோடி எடுத்த சரியான முடிவுகளே இதற்கு காரணம். நம் நாட்டில் இதுவரை 53 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இதுமாதிரி தடுப்பூசி அதிகமாகவும் விரைவாகவும் செலுத்தப்படவில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது தினமும் மத்திய அரசை தி.மு.க. குற்றம் சாட்டியது. மூன்று நாட்களுக்கு முன் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் பிரதமர் மோடியை மனதார பாராட்டுகிறோம் என கூறியிருக்கிறார். தமிழகம் கேட்டதை விட அதிகமாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது’ என கூறினார்.