குல்மார்கில் தேசியக்கொடி

பாரதம் தனது 75வது சுதந்திர தினத்தை கொண்ட உள்ள நிலையில் நமது ராணுவத்தால் குல்மார்கில் 100 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பம் நிறுவப்பட்டு அதில் நமது  தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. வடக்கு கட்டளையக தளபதி லெப்டினெண்ட் ஜென் ஜோஷி இந்த விழாவில் கலந்து கொண்டு தேசத்திற்காக வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகங்களை போற்றி பேசினார். காஷ்மீரில் அமைதியும் தேசப்பற்றும் அதிகரித்து வரும் இந்த புதிய யுகத்தை நினைவு கூறும் வகையில் இக்கொடி பறக்கும் என ராணுவம் கூறியுள்ளது. 1965ம் ஆண்டு போரில் இந்த பகுதியில்தான் பாகிஸ்தான் படைகள் முதலில் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த ஆடு மேய்க்கும் காஷ்மீர் இளைஞர்கள் அந்த தகவலை ராணுவத்திற்கு தெரிவித்தனர். அதனால் ராணுவம் சுதாரித்துக்கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாகிஸ்தானை வீழ்த்தியது.