சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், படிப்படியாக உருமாற்றம், அடைந்து வருகிறது. இந்த மாறுபாடுகளுக்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஈட்டா என கிரேக்க எழுத்துக்களைக் கொண்டு பெயர்கள் சூட்டப்பட்டு வருகிறது. கிரேக்க எழுத்து வரிசையில் மொத்தமே 24 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் கொரோன வைரசோ தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. என்வே, இந்த எழுத்துக்களுக்குப் பிறகும் பெயர்கள் தேவைப்படும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், மாறுபாடுகளை அடையாளப்படுத்த நட்சத்திரக் கூட்டங்களின் பெயர், கிரேக்க கடவுள்கள், பெண் தெய்வங்களின் பெயர்களையும் சூட்ட ஆலோசித்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் கோவிட் தொழில்நுட்பக்குழு தலைவர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.