ஆகஸ்ட் இறுதிக்குள் அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்ததை அடுத்து, ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். டஜன் கணக்கான எல்லையோர மாவட்டங்கள் தலிபான்களின் கைகளில் சிக்கியுள்ளன. இதில் முக்கியமாக, வடக்கு ஆப்கானிஸ்தான், தெற்காசியாவில் உள்ள கனிம வளம் நிறைந்த மாகாணங்களின் நுழைவாயில் என கருதப்படும் குண்டூஸ் நகரம் தலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. இம்மாகாணம் தலைநகருடன் நேரடி சாலை இனைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இப்பகுதி வழியாகக் கடத்தப்படும் அபின் என்ற போதைப்பொருள் நடமாட்டம் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. இதைத்தவிர தாலோகான், ஷெபர்கானின், ஜரஞ்ச் உள்ளிட்ட பகுதிகள் பயங்கரவாதிகளின் பிடியில் அகப்பட்டுள்ளன. இவற்றை விரைவில் மீட்போம் என ராணுவம் தெரிவித்துள்ளன. ராணுவத்துக்கு உதவ பி-52 குண்டுவீச்சு விமானங்கள், ஸ்பெக்டர் துப்பாக்கிகளை தாங்கிய அமெரிக்க விமானங்களும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கத் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்.