காலநிலை மாற்றம் ஐ.நா கவலை

காலநிலை மாற்றங்கள் எதிர்காலத்தில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆய்வு அறிக்கையை, ஐ.நா. காலநிலை அறிவியல் குழு வெளியிட்டுள்ளது. இதன்மீது நடந்த இரண்டு வார இணைய வழி விவாதத்திற்கு பிறகு, இக்குழு, காலநிலை மாற்றம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய 195 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இக்குழு கடந்த காலம், எதிர்கால காலநிலை மாற்றம் குறித்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. இவ்வருடம் பாரதம், சீனா, வட ஐரோப்பா ஆகிய நாடுகளில் பெரு வெள்ளம் உருவாகியது. அதேசமயம், வட அமெரிக்கா, கனடா, தெற்கு ஐரோப்பா உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத வெப்ப அலைகள் ஏற்பட்டது. உலகின் தட்பவெப்பநிலை அதிகரித்ததும் கடல் மட்டம் உயர்ந்ததுமே இதற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.