கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 14 சட்டவிரோத தொலைபேசி இணைப்பகங்களை நடத்தப்பட்டு வந்ததை கேரள காவல்துறையினர் கண்டறிந்தனர். இது தொடர்பாக ஹக்கீம், இர்ஷாத், நிதின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹவாலா ஆபரேட்டர்கள், தங்க கடத்தல்காரர்கள், பயங்கரவாதிகள் இதனை பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த முறைகேடான தொலைபேசி இணைப்பகங்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புடன் தகவல்களை பறிமாறி வந்ததை நமது உளவு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த மாதம் கோழிக்கோட்டில் இதே போன்றாதொரு சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் கண்டறியப்பட்டது. அதற்கு முன்பாக பெங்களூருவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த முஸ்லிம் பயங்கரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.