பாகிஸ்தானுக்கு மூக்குடைப்பு

ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க சக்திவாய்ந்த 15 நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் (யு.என்.எஸ்.சி) அமர்வு, ஐ.நா சபைக்கு தற்போது தலைமை வகிக்கும் பாரதத்தின் தலைமையில் ஐ.நா சபையில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள பாகிஸ்தான் விடுத்த அழைப்பை பாரதம் நிராகரித்தது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஆப்கன் தூதர் குலாம் இசச்சாய், பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், போர் தளவாடங்கள், போக்குவரத்து உள்ளிட்ட உதவிகளை வழங்குவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ‘பயங்கரவாதத்தை எவ்வகையிலும் உலக நாடுகள் அனுமதிக்கக்கூடாது. ஆப்கன் பயங்கரவாதிகள் வேறு எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்கோ தாக்குவதற்கோ அந்த நாட்டை பயன்படுத்தவில்லை என்பதையும் உறுதிப்படுத்துவதும் அவசியம்’ என்று ஐ.நாவிற்கான பாரதத்தூதர் டி எஸ் திருமூர்த்தி கூறினார்.