ஹிந்து கோயில்கள் வீடுகள் தாக்கப்பட்டன

நமது அண்டை நாடான வங்க தேசத்தில், கடந்த சனிக்கிழமை அன்று, குல்னா மாவட்டத்தின் ஷியாலி, கோவரா கிராமங்களில் உள்ள ஹிந்துக்கள் ஒரு சாமி ஊர்வலத்தை நடத்தினர். அதனை தடுத்து நிறுத்துமாறு உள்ளூர் முஸ்லிம் மதகுரு முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டார். அதனைத் தொடர்ந்து, நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் உள்ள நான்கு கோவில்களை அடித்து நொறுக்கினர். 58 ஹிந்து வீடுகளைத் தாக்கி கொள்ளையடித்தனர். இது குறித்து புகார் அளித்தும் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வங்கதேசத்தின் எந்த ஊடகமும் இந்த செய்தியை வெளியிடவில்லை என பங்களாதேஷ் ஹிந்து ஒற்றுமை கவுன்சில் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது துரதிருஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது. வங்கதேச அரசு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், கோயிலை மறு சீரமைப்பு செய்ய வேண்டும், மக்களின் சொத்துக்கள் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வி.ஹெச்.பி தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.