விவசாயிகள் உதவித் தொகை

பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய், 4 மாதங்களுக்கு ஒரு முறை 3 தவணைகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. பிரதமர் அலுவலகம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் 9 கோடியே 75 லட்சத்துக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு மொத்தம் சுமார் 19 ஆயிரத்து 500 கோடி, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுடனும் நாட்டு மக்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார். முன்னதாக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் தனது சுட்டுரை வாயிலாக புகழஞ்சலி செலுத்தினார். அதில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மகாத்மா காந்தியால் உத்வேகமடைந்தது, இளைஞர்களை எழுச்சி பெறச்செய்தது” என்று கூறியுள்ளார்.