விரைவில் உத்தராகண்ட் சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் தேசத்தின் முதல் சம்ஸ்கிருத தொலைக்காட்சி துவங்க உள்ளது. ஹரித்துவாரில் அந்த மாநிலத்தின் சம்ஸ்கிருத கல்வித்துறை செயலர் வினோத் பிரசாத் செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார். நாடகம், கதை, பாடல்கள், மாநிலத்தின் சுற்றுலா மையங்கள், ஆன்மீக தலங்கள், திருக்கோயில் தரிசனம் அனைத்தும் சம்ஸ்கிருதத்தில் ஒளிபரப்பப்படும் என்றார் அவர் தேசத்திலேயே உத்தராகண்ட் மாநிலத்தில் தான் சம்ஸ்கிருதம் இரண்டாவது ஆட்சிமொழியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.