களத்தில் தனியாக லூசி களப்புரா

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப் பிராங்கோ முலக்கலை கைது செய்யக் கோரி கன்னியாஸ்திரிகளுடன் போராட்டத்தில் பங்கேற்றதற்காக சகோதரி லூசி கலப்புரா கத்தோலிக்க திருச்சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். வாட்டிகனும் அவரது மூன்று முறையீடுகளை விசாரிக்காமலேயே நிராகரித்தது. கடந்த இரண்டு வருடங்களாக அவர் தங்கியுள்ள கான்வென்ட்டில் இருந்து அவரை வெளியேற்ற, உணவு, தண்ணீர் மறுப்பு, சமூக விலக்கல், இணையத் துண்டிப்பு, உயிருக்கு அச்சுறுத்தல், பொய் கதைகளை பரப்புவது என பலசித்திரவதைகளை அனுபவித்து வருகிறார். அவரது வழக்கை எந்த வழக்கறிஞரும் ஏற்று நடத்த முன்வரவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், ‘இது நீண்ட போராட்டம் என எனக்குத் தெரியும். 17 வயதில் கன்னியாஸ்திரி ஆன நான் 40 வருடங்களாக அதனை தொடர்கிறேன். கடைசிவரை அப்படியே இருப்பேன். உச்ச நீதிமன்றம்வரை சென்று என் வழக்கை நானே வாதாடுவேன்’ என தெரிவித்தார்.