அதிக சப்தம் வெளிப்படும் வகையிலான சைலன்ஸர்களை இளைஞர்கள் தங்களுடைய இருசக்கர வாகனங்களில் பொருத்தி வீதி வலம் வருவது அதிகரித்து வருகிறது. இதனால் ஒலி மாசு அதிகரித்தல், மக்களுக்கு இடையூறு, குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் சிரமம் என பல தொல்லைகள் ஏற்படுகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியின் எஸ்.பி வெங்கட்ட அப்பல நாயுடு உத்தரவின்பேரில் காவலர்கள் அதிக சப்தத்தை வெளிப்படுத்தும் வகையிலான சைலன்ஸர் பொருத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு புல்லட் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் சைலன்சர்களை தனியாக கழற்றி எடுத்தனர். பின்னர் அவற்றை ரோடு ரோலர் ஏற்றி அழித்தனர். இதுபோன்ற விஷயங்களில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் கவனம் செலுத்தவும் அக்கறை காட்டவும் எஸ்.பி வெங்கட அப்பல நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.