ராணுவ ஆடை தயாரிப்பில் திருநங்கையர்

திருநங்கையர் வாழ்வாதாரத்தை உயர்த்த, ‘சகோதரன்’ அமைப்பு சார்பில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த அமைப்பு, ‘இன்னர்வீல்’ எனும் அமைப்புடன் இணைந்து 40க்கும் மேற்பட்ட திருநங்கையருக்கு, குளிர்கால ஆடை தயாரிப்பு பயிற்சி அளிக்கிறது. முதற்கட்டமாக 40 திருநங்கையர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற திருநங்கையர், முதன் முதலில் உல்லன், ‘ஸ்கார்ப்’ தயாரித்து அதன்படி, தற்போது பயிற்சி பெற்ற 40 திருநங்கையர், குளிர்பிரதேசங்களில் சேவையாற்றும் ராணுவ வீரர்களுக்கு தேவையான உல்லர் ‘ஸ்கார்ப்’களை தயாரித்து வருகின்றனர். மேலும் பல திருநங்கையருக்கு பயிற்சி அளித்து, அவர்கள் தயாரிக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்து, திருநங்கையரின் வாழ்வாதாரத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது அந்த அமைப்பு.