லண்டனில் இருந்து செயல்படும் இஸ்ரேல் நாட்டின் ஸோடியாக் மரிடைம் நிறுவனத்தின் எம்.வி மெர்சிர் ஸ்ட்ரீட் என்ற எண்ணெய்க் கப்பல், கடந்த ஜூலை 29ல் ஓமனுக்கு அருகே அரபிக் கடலில் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இரு கப்பல் பணியாளர்கள் உயிரிழந்தனர். இதற்கு காரணம் ஈரான்தான் என இஸ்ரேல் குற்றம் சாட்டியது. அதனை ஈரான் மறுத்தது. இந்நிலையில், இதுகுறித்து நேட்டோ செய்தித் தொடர்பாளர் டைலன் ஒயிட் இந்த தாக்குதலை கண்டித்ததுடன் பிராந்திய நிலைத்தன்மையை ஈரான் குலைக்கிறது என கூறினார். ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடர்பாளர் நபிலா மஸ்ரலி, ‘கடல் போக்குவரத்து சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் ஈரான் மேற்கொள்ளும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது’ என கண்டித்துள்ளார்.