பிரதமர் இல்லம் வாடகைக்கு விடப்படும்

பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளன. திவாலாகும் நிலையில் உள்ள பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளும் தயக்கம் காட்டுகின்றன. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி பண மோசடி தொடர்பாக எப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் ‘கிரே’ எனப்படும் மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் இருப்பதால் அதற்கு நிதியுதவி கிடைப்பதும் கடினமாக உள்ளது. தற்போதைக்கு சீனாவின் தயவால் காலம் ஓட்டுகிறது பாகிஸ்தான். முன்னதாக, பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றபோது ‘பிரதமர், கவர்னர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இனி அரசு பங்களாவில் வசிக்க மாட்டார்கள். சாதாரண வீடுகளில் வசிப்பார்கள். இதில் மீதமாகும் பணம் மக்கள் நல திட்டங்களுக்கு செயல்படுத்தப்படும்’ என அறிவித்தார். எனினும் அவர்களுக்கான பங்களாக்களா பராமரிக்க பெரும்தொகை செலவானது. அதனை ஈடுகட்ட, பிரதமரின் பங்களா திருமணம், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இம்ரான்கானின் ராணுவ செயலர் வாசிம் இப்திகாரின் மகளின் திருமணம்கூட சமீபத்தில் பிரதமர் பங்களாவில்தான் நடந்துள்ளது.