ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சட்டத்துறை அமைச்சர்களின் எட்டாவது கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பாரதத்தின் சார்பில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சட்டத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல்ம் கலந்து கொள்கின்றனர். கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்ய கூட்டமைப்பு, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன. பெரும்பாலானவர்கள் வீடியோ கான்பரன்சிங் வழியாக இதில் பங்கேற்கின்றனர். சந்திப்பின் போது, உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு, கொரோனா விவகாரங்களில் தேச சட்டங்களின் பங்கு, குடிமக்களுக்கு இலவச சட்ட உதவி, ஊழலை எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படும். கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு கூட்டு அறிக்கையும் கையெழுத்திடப்படும். இக்கூட்டத்திற்கு முன்னதாக, நேற்றும் இன்றும் இந்நாடுகளின் பல்வேறு சட்ட நிபுணர்கள், சட்டத் துறை செயலாளர்கள் அதிகாரிகள் பங்கு பெறும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.