பாரத வம்சாவளி மாணவி தேர்வு

அமெரிக்க கல்லுாரிகளில் சேர எஸ்.ஏ.டி. மற்றும் ஏ.சி.டி. என்ற தகுதி தேர்வு நடைபெறும் இதில் வெற்றி பெறுவோரில் சிறந்த அறிவாற்றல் உள்ளோரை கண்டறிய ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வி.டி.வி. மையம் ஒரு தேர்வு நடத்தும். இதில் உலகளவில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு இத்தேர்வில் 84 நாடுகளைச் சேர்ந்த 19 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 20 சதவீதத்திற்கும் குறைவானோரே தேர்ச்சி பெற்றனர். அதில் பாரத வம்சாவளியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவியான நடாஷா பெரியும் ஒருவர். அவருக்கு, ‘சிறந்த அறிவாற்றல் கொண்ட மாணவி’ என்ற ‘உயரிய கௌரவ விருது’ வழங்கப்பட்டுள்ளது. நடாஷாவின் திறமைகள் எட்டாம் வகுப்பு மாணவிக்கு நிகராக உள்ளதாக தேர்வுக் குழு சான்றளித்துள்ளது.