மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான வழக்கு, கல்கத்தா உயர்நீதிமன்றத்தில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. அதில் அனைத்து தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இவ்வழக்கில் ஆஜரான மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜெஹாங்கீர் தஸ்தூர், ‘நீதிமன்றம் அனுமதித்தால், இதனுடன் சம்பந்தப்பட்ட சில கடுமையான குற்ற வழக்குகளை என்ஐஏ அல்லது சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் வன்முறை நடந்ததை யாரும் மறுக்க முடியாது. எனவே, விசாரணையின் போது, மனுதாரர்களுக்கான வழக்கறிஞர்களும் இதனை தீர விசாரிக்க எஸ்.ஐ.டி விசாரணை தேவை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உட்பட அனைத்து மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமைக்கு தேர்தல் ஆணையம் பொறுப்பல்ல என்று வாதிடப்பட்டுள்ளது. ” மே 5ம் தேதிதான் தங்களின் புதிய அரசு அமைந்தது என மேற்கு வங்க அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டது. அம்மாநில காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், மனுதாரர்களின் கோரிக்கையை எதிர்த்தார். என்.ஹெச்.ஆர்.சி அறிக்கை ஆதாரமற்றது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறினார்.