தடுப்பூசிக்குழு மீது தாக்குதல்

கடந்த ஆண்டு நைஜீரியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் மட்டுமே போலியோ நோய் தொடர்ந்துகொண்டுள்ளது. இங்குள்ள அடிப்படைவாதிகள், போலியோ சொட்டு மருந்து போடுவதை விரும்புவதில்லை. ஏனெனில், இது குழந்தைகளுக்கு கருத்தடை செய்யும் மேற்கத்திய நாடுகளின் சதி’ என்று அவர்கள் இன்னமும் நம்புகின்றனர். அவ்வகையில், பாகிஸ்தானில் அல்கொய்தா பயங்கரவாதத் தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த அபோட்டாபாத், தேரா இஸ்மாயில் கான் மாவட்டம், பெஷாவர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் போலியோ மருந்து செலுத்தும் குழுவினர் மீது மூன்று தாக்குதல்கள் நடைபெற்றன. அதில், பாதுகாப்புக்கு வந்த இரண்டு காவல் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதேபோல, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், போலியோ சொட்டு மருந்து போட வந்த சுகாதார பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் இரண்டு காவலர்களும் ஸ்வாபியில் இரண்டு மருத்துவ ஊழியர்களும் கொல்லப்பட்டனர். இதனால், போலியோ சொட்டு மருந்து திட்டத்தை காலவரையின்றி பாகிஸ்தான் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.