பாரதத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 6.51 கோடி நபர்களுக்கு 2020-21ம் ஆண்டில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், 130.9 கோடிக்கும் அதிகமான மனித நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நடப்பு 2021-22-ம் ஆண்டில் 25 லட்சத்துக்கும் அதிகமானச் சொத்துகள் இத்திட்டத்தின் கீழ் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 2021 ஜூலை 23 வரை, தமிழகத்தில் 54.99 லட்சம் நபர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கான ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்குவதற்காக Ne-FMS’ஐ மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இந்தக் உடனடி பணம் செலுத்தும் முறையை 25 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்தி உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ், 2018-19ம் ஆண்டு ரூ 4951.66 கோடியும், 2019-20ம் ஆண்டு ரூ 5447.80 கோடியும், 2020-21ம் ஆண்டு ரூ 8941.26 கோடியும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் ரூ. 73 ஆயிரம் கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2020-21-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது ரூ. 11,500 கோடி அதிகம்.