தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வெளியிட்ட அறிக்கையில், ‘தேர்தலின்போது, மின் பயன்பாட்டு கணக்கெடுப்பு மாதம் ஒருமுறையாக மாற்றி அமைக்கப்படும் என தி.மு.க வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை செயல்படுத்தவில்லை. ஜூலை 1ல் எடுக்க வேண்டிய மின் அளவீடு எடுக்கப்படவில்லை. 2019 மார்ச் மாத கட்டணத்தை செலுத்த கூறுகின்றனர். இதனால் குறைவான மின்சாரத்தை உபயோகித்தாலும் அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதிக கட்டணத்தால் பெண் தற்கொலை முயற்சி என செய்திகள் வருகின்றன. தோராய கணக்கீட்டில் ஆன்லைனில் கட்டணம் அனுப்பப்படுகிறது. அதை வைத்து அதிக மின்சாரம் பயன்படுத்தியதாக டெபாசிட் உயர்த்தப்படுகிறது. 2 மாத தி.மு.க ஆட்சி மீண்டும் மக்களை இருளில் தள்ளியுள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பல மணி நேரம் மின்சாரம் இல்லை. மின் கட்டணமும் 2 முதல் 3 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் மக்கள் வருமானம் இல்லாமல் தவிக்கையில், இந்த செயல்கள் மக்களை பாதிக்கும். மின்வாரியத்தின் நிர்வாகத் திறனற்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன்’ என அவர் தெரிவித்தார்.