மத்திய ஜவுளி அமைச்சகம், தனது பயன்பாட்டில் இல்லாத, கண்காணிப்பில் இல்லாத அதன் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நடந்துள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறியவும், அகற்றவும், நிலங்களை பாதுகாக்கவும் நவீன டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆரம்பித்து உள்ளது. சோமசுந்தரம் மில்ஸ், காலீஸ்வரா மில்ஸ், ஜே.ஏ.எம் மில்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி ஆய்வுகள் திருப்திகரமாக இருந்தன. எனவே, இத்திட்டம் இனி தேசம் முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதனால் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு களையப்படும் என ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.