‘டிரோன் தொழில்நுட்பம் வாயிலாக உலகில் புதிய தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் நேரம், செலவு குறைவு, இயக்குவது எளிது என பல நன்மைகள் உள்ளன. இந்த வளர்ச்சியை முழுமையாக, முறையாக பயன்படுத்த சட்ட விதிகளில் பல மாற்றங்கள் செய்து எளிமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கையில், டிரோன் இயக்க லைசென்ஸ் விண்ணப்பங்கள் 25ல் இருந்து ஆறாக குறைக்கப்படுகின்றன. சுயசான்று, அத்துமீறல் இல்லாத கண்காணிப்பு, லைசென்ஸ் கட்டணம் குறைப்பு, பைலட் லைசென்ஸ் நீக்கம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆகஸ்ட் 5 வரை பொதுமக்கள் இது குறித்த தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்’ என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.