அமெரிக்காவை சேர்ந்த மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் எம்.ஐ.டி டெக்னாலஜி ரிவியூ என்ற அதன் பத்திரிகையில், பாரதத்தில் கொரோனா நிலை என்ற கட்டுரையை கடந்த ஜூலை 5ல் வெளியிட்டது. அதில், பாரதம் கொரோனா போரில் தோற்றுவிட்டது, கோவின் செயலி ஒரு தொழில்நுட்ப தோல்வி, கொரோனாவால் 48.56 லட்சம் பேர் இறந்தனர், 18 முதல் 44 வயதானவர்களுக்கு தடுப்பூசி இலவசம் இல்லை என பல பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், பாரத அரசு கொரோனா பெரும் தொற்றை மிக சிறப்பாக கையாண்டது, கோவின் செயலியை பெற 150க்கும் அதிகமான நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 4.58 லட்சம் மட்டுமே (அமெரிக்காவில் 6 லட்சத்திற்கும் அதிகம்), 18 முதல் 44 வயதானவர்களுக்கு தடுப்பூசி இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது என்பதுதான் உண்மை.
இந்த கட்டுரையை வெளியிட நிதியுதவி செய்த்து ராக்பெல்லர் பௌண்டேஷன் என்ற தொண்டு அமைப்பு. ராக்பெல்லர் பௌண்டேஷன், போர்ட் பௌண்டேஷன், ஜார்ஜ் சோரஸ் பௌண்டேஷன் உள்ளிட்ட பல தொண்டு நிறுவனங்கள், பாரதத்தில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும், அரசியல் நிலையற்றத் தன்மையை உருவாக்கவும், கலாச்சார சீரழிவை ஏற்படுத்தவும் பல காலமாக பெரும் தொகைகளை செலவிட்டு வருகின்றன. இதுவே இது போன்ற கட்டுரைகள் வெளியாவதன் பின்னணி.