உலகின் இரண்டாவது மிகப்பெரிய குழந்தைகள் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனமான கிட்டெக்ஸ் கேரளாவில் ரூ. 3,500 கோடி மதிப்பில், 30 ஆயிரம் பேருக்கு வேலை தரும் அளவிலான பெரிய உற்பத்தி தளத்தை துவக்கியது. ஆனால், அம்மாநில அரசு அதிகாரிகள், அவர்களுக்கு அளித்த கடும் நெருக்கடிகளால் அந்நிறுவனம், கேரளாவை விட்டு வெளியேறி வேறு மாநிலத்தில் தன் நிறுவனத்தை துவக்க முற்பட்டது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் இதற்காக ஆராயப்பட்டன. இந்நிலையில், தெலுங்கானா அரசு, தங்கள் மாநிலத்தில் அத்தொழிலைத் துவங்க ஒரு தூதுக்குழுவை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அனுப்பி பேசியது. மேலும், அந்த நிறுவன அதிகரிகளை தனி விமானத்தில் தெலுங்கானாவுக்கு அழைத்துச் சென்று பார்வையிடவும் ஏற்பாடு செய்துள்ளது.