புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தன் அறிக்கையில், ‘திரைப்படத் துறையினர் கூறுவதை போல, கருத்து சுதந்திரத்தை பறிக்கும் எந்த திருத்தச் சட்டமும் தற்போது கொண்டு வரப்படவில்லை. ஒரு திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கிய பிறகு இந்நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை கருதி மறு தணிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிட முடியும் என்பததே தற்போது புதிதாக சேர்க்கப்பட உள்ள திருத்தம். ஜாதி, மத, பாலியல் வன்முறைகளை துாண்டும் திரைப்படங்களை மறு தணிக்கை சட்டத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இச்சட்டம் இன்றைய காலகட்டத்திற்கு அவசியம். திரைப்பட படைப்பாளிகள் திரைக்கருவில் பிழை இல்லையேல் மறு தணிக்கைக்கு அஞ்ச தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.