நந்திகிராமில் பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரியின் தேர்தல் வெற்றிக்கு எதிராக வழக்குத் தொடுத்தார் மமதா பானர்ஜி. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கௌஷிக் சந்தா, பா.ஜ.க தொடர்புடையவர், எனவே, அவரை நீக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார் மமதா. தேவையில்லாமல், நீதித்துறையின் மீது களங்கம் கற்பித்ததற்காக, அவருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சர்ச்சை காரணமாக நீதிபதி இனி அவ்வழக்கை தான் விசாரிக்கப்ப்போவது இல்லை என அதிலிருந்து விலகினார். முன்னதாக கடந்த வாரம், நாரதா லஞ்சம் வழக்கில் தாமதமாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததற்காக கல்கத்தா உயர் நீதிமன்றம் மமதாவுக்கு ரூ. 5000 அபராதம் விதித்தது என்பதும் மமதா மீதான பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருத்த போஸ், நீதிபதி இந்திரா பானர்ஜி உள்ளிட்ட பல நீதிபதிகள் அதனை விசாரிக்காமல் விலகிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.