கேரளாவில் இருந்து வெளியேறும் கிட்டெக்ஸ்

உலகின் இரண்டாவது பெரிய குழந்தைகள் ஆடை உற்பத்தியாளர் கிட்டெக்ஸ் குழுமம், கேரளாவில் 3,500 கோடி ரூபாய் மதிப்பில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் விதத்தில் ஒரு ஆயத்த ஆடைப் பூங்காவை நிறுவ முயற்சிகளை மேற்கொண்டது. 2020 ஜனவரியில் கொச்சியில் நடைபெற்ற ‘அசென்ட் குளோபல் முதலீட்டாளர்கள் சந்திப்பில்’ கேரள அரசுடன் இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அது தற்போது கைவிடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய இக்குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சாபு எம் ஜேக்கப், கேரள அரசு மற்ற மாநிலங்களை போல எந்த சலுகையும் வழங்கவில்லை என்றாலும் அங்கு தொழில் துவங்க முயன்றேன்.ஆனால், அதிகாரிகளின் தொடர் தொல்லையால் இத்திட்டம் கைவிடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் யார் முதலீடு செய்தாலும் மன அமைதியை இழந்து தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள். இந்நிலை தொடர்ந்தால் கேரளாவில் தொழில்கள் மயானமாகும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் பங்கு சந்தையில், இந்த நிறுவனப் பங்குகளின் விலை 10 சதவீதம் குறைந்தது.