தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, டாக்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது அவர், ‘கடந்த ஒன்றரை ஆண்டுகளில் டாக்டர்களின் உழைப்பு மிகச்சிறப்பானது. இதற்காக அனைத்து இந்தியர்களின் சார்பில், அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கான நிதி இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மருத்துவ துறை நிபுணர்கள், யோகாவை முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய நவீன மருத்துவ அமைப்புகள் கொரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகளை தீர்ப்பதில் யோகா எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து ஆய்வுகள் நடத்தி வருகின்றன’ என பேசினார்.