இந்தியா சீனா பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான (WMCC) 22 வது கூட்டம் நடைபெற்றது. இந்தியா சார்பில், கிழக்கு ஆசியாவுக்கான வெளிவிவகார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார். சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் பெருங்கடல் துறை இயக்குநர் ஜெனரல் சீனக் குழுவுக்கு தலைமை தாங்கினார். அதன் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு, அமைதியை முழுமையாக மீட்டெடுப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஏதுவாக அனைத்து பிரச்சனைக்குரிய விஷயங்களிலும் முழுமையான தீர்வை எட்டுவதற்காக தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை, ராணுவ பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மூலம் ஒரு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை  அடைய வேண்டும். இது குறித்த தகவல்தொடர்புகளை பராமரிக்க வேண்டும்’ என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை விரைவில் துவங்கவும் முடிவு செய்யப்பட்டது.